
மம்முட்டியிடம் மன்னிப்பு கேட்ட புலிமுருகன் இயக்குனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டியிடம் தான் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் இயக்குனர் வைசாக். இது குறித்து அவர் கூறும்போது, “சாரி மம்மூக்கா(மம்முட்டி).. நீங்கள் என்னிடம் பலமுறை கேட்டுக் கொண்டும் கூட நான் உங்கள் வயதை (72) மறந்து விட்டேன். அப்போது மற்றவர்களிடம் சொல்லும்போது கூட மம்மூக்காவிற்கு 45 முதல் 50 வயது மட்டுமே ஆனதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல மம்முட்டியின் கண்கள் தான் இந்த படத்தில் அவரது வயதை தீர்மானிக்கின்றன. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வயதாகவே அவரை நினைத்து மிகப்பெரிய சவாலான ஆக்ஷன் காட்சிகளில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன். சில நேரங்களில் விடியற்காலை மூன்று, நான்கு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தி அவருக்கு சிரமம் கொடுத்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை மம்மூக்கா தான்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!