
திருமணத்தில் மகள் அணிந்திருந்த நகைகள் குறித்து சுரேஷ்கோபி விளக்கம்
திருமணம் முடிந்த நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சுரேஷ்கோபியின் மகள் பாக்யா அணிந்திருந்த நகைகள் குறித்து சிலர் விஷமத்தனமாக தகவல்களை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக இந்த நகைகள் அனைத்தும் சுரேஷ்கோபிக்கு அரசியல் ரீதியாக அன்பளிப்பாக வந்தவை என்றும் இவை அனைத்திற்கும் முறையான வரி கட்டப்படவில்லை என்றும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இவற்றையெல்லாம் பார்த்து கொதித்து எழுந்துள்ள நடிகர் சுரேஷ்கோபி இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் அணிந்திருந்த நகைகள் அனைத்துமே அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தது. இதற்கான பணப்பரிமாற்றம் அனைத்தும் ஜிஎஸ்டி வரி உட்பட ஆதாரப்பூர்வமாக இருக்கிறது. தயவு செய்து இதுபோன்று என் மீதும் என் குடும்பத்தின் மீதும் தேவை இல்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!