
எங்கள் ஊரையே தவறாக காட்டுகிறார்கள் ; திலீப் படத்திற்கு எதிராக வழக்கு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோது இதுகுறித்த சில காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில் தங்கமணி கிராமத்தைச் சேர்ந்த வி.ஆர்.பைஜூ என்பவர் தங்களது கிராமத்தைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வெளியானால் தங்களது கிராமத்தையே மற்ற நகரங்களில் இருந்து மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது என்றும் அதில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!