
மீண்டும் பேண்டஸி படத்தில் நடிக்கும் டொவினோ தாமஸ்
"முன்பே" என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டொவினோ தாமஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டுள்ள டொவினோ தாமஸ், “நீங்கள் இழந்த ஒன்றை திரும்ப பெறுவதற்காக எந்த எல்லைக்கு செல்வீர்கள் ?” என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்றபடி நழுவிச்செல்லும் தனது காதலியை பிடிப்பதற்காக பாதாளத்தை நோக்கியோ அல்லது விண்வெளியை நோக்கியோ டொவினோ தாமஸ் பறந்து செல்வது போல இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!