
மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து நேரு என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பிரியாமணி மோகன்லாலுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையப்படுத்தி, ஒரு பிரபல வழக்கை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் மோகன்லால் பிரியாமணி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உருவான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ல் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!