
நடிக்க அனுமதிக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளானேன் : மனம் திறந்த மகேஷ்பாபு சகோதரி
தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிப்பை விட்டு ஒதுங்கிக் சினிமா தயாரிப்பு, பிசினஸ் என ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் தான் நடிப்பை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தையும் ஆதலால் பட்ட மன அழுத்தத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சுளா.
இது பற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்ததுமே நான் நடிப்பதற்கு என் தந்தை கிருஷ்ணாவின் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்னை ஒரு நடிகையாக பார்க்க விரும்பவில்லை. அதுமட்டுமல்ல எனது உறவினர்கள் கூட இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் ஆளானேன். அதன்பிறகு யோகாவில் தீவிர கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து பின்பு பிசினஸில் இறங்கினேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!