
ஜெயராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மம்முட்டி
இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஆப்ரஹாம் ஒஸ்லர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம். இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பில் மம்முட்டியும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இது குறித்த புகைப்படமும் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். மம்முட்டி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் இந்த கொலை வழக்கில் முக்கியமான திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!