
15 லட்சம் பணம், பாஸ்போர்ட் திருட்டு : லண்டனில் ஜோஜு ஜார்ஜ் தவிப்பு
புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தவித்தார் ஜோஜு ஜார்ஜ். படத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக பணத்தை வழங்கியது. இதுதொடர்பாக லண்டனின் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோஜு ஜார்ஜ் புகார் அளித்தார். அவர் நாடு திரும்புவதற்காக தற்காலிக பாஸ்போர்ட்டை தூதரகம் வழங்கியது. படக் குழுவினரில் மேலும் இருவரின் பாஸ்போட்டும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!