
பழம்பெரும் மலையாள நடிகர் சி.வி.தேவ் காலமானார்
வடகரை செம்மரத்தூரில் 1940ல் பிறந்த சிவி தேவ், 19 வயதில் "விளக்கிண்டே வெளிச்சத்தில்" என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1959ல் வெளியானது. 1982ல் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய "கோபுர நடையில்" படத்தில் நடித்து இருந்தார். "பொந்தன் மட" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் நசுருதின் ஷாவுடன் இணைந்து நடித்து இருந்தார். சத்யம், ஈ புழையும் கடன்னு, மிழி இரண்டிலும். சந்திரோல்சவம், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். "யாரோ ஓராள்" என்ற படத்தை இயக்கினர். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், சுகன்யா, சுகவ்யா என்ற மகள்களும் சுகாத்மஜன் என்ற மகனும் உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!