
ரசிகரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் : போலீசுக்கு ஜூனியர் என்டிஆர் கோரிக்கை
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிந்தலுரு கிராமத்தில் வசித்து வந்த ஷ்யாம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை தற்கொலை இல்லை என கூறி அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். ஷ்யாமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தனது ரசிகரின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கும், போலீசிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛ஷ்யாம் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவரது மர்ம மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!