
தி கேரளா ஸ்டோரி : பரபரப்பான சூழ்நிலையில் நாளை மறுநாள் ரிலீஸ்
இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே சர்ச்சையும் கிளம்பியது. குறிப்பாக கேரள முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய 10 காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வருகிற 5ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகிறது. இதற்கு கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கேரளா முஸ்லீம் யூத் லீக் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டால் படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது நீதிமன்றம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!