
மலையாள பிக்பாஸ் சீசன்-5யும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார்
இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் நான்கு சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதேசமயம் கடந்த நான்காவது சீசனில் மோகன்லால் தொகுத்து வழங்குவது பற்றி நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக அவர் போட்டியாளர்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று அதிகம் சொல்லப்பட்டு வந்தது. மேலும் இதற்கு மிக சரியான நபராக ஆக்சன் கிங் என அழைக்கப்படும் சுரேஷ்கோபி தான் பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர்.
இதனால் இந்த பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளரில் மாற்றம் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த கட்டமாக இந்த புதிய சீசனுக்காக வெளியாக இருக்கும் புரோமோவுக்கான படப்பிடிப்பில் தற்போது மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த சீசன் எப்போது இருந்து துவங்கும் என்பது குறித்த இந்த புரோமோ விரைவில் வெளியாகும் என தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!