
சிவராஜ்குமாரின் முப்டி பார்ட் 2 அறிவிப்பு
கடந்த 2015ல் சிவராஜ்குமார் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான முப்டி படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ‛பைரதி ரணகல்" என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. முப்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரையே இந்தப்படத்தின் டைட்டிலாக மாற்றியுள்ளார்கள். முதல் பாகத்திற்கு முன்னதாக சிவராஜ்குமாரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை சொல்லும் விதமாக ப்ரீக்வல் ஆக இந்த இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நார்தன் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த முப்டி திரைப்படம் தான் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல என்கிற பெயரில் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!