
ஜெய்சல்மரில் துவங்கிய மலைக்கோட்டை வாலிபன் படப்பிடிப்பு
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சில படங்களின் மூலமாகவே குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கோல்டன் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய் சல்மரில் துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படம் நாளை (ஜன-19) வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!