
பஹத் பாசில் நடிக்கும் தூமம் கன்னட படமல்ல
அதேசமயம் இது கன்னட படம் அல்ல என்றும் முழுக்க முழுக்க மலையாளத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மூலம் கன்னட இயக்குனரான பவன்குமார் தான் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகை அபர்ணா பாலமுரளி பஹத் பாசிலுக்கு ஜோடியாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
முதன்முறையாக மலையாளத்தில் படம் இயக்கியது குறித்து இயக்குனர் பவன்குமார் கூறும்போது, “கலைக்கு மொழி ஒரு பிரச்சனை கிடையாது. ஒரு வார்த்தை கூட மலையாள தெரியாமல் தான் இந்தப்படத்தை இயக்க ஆரம்பித்தேன்.. பஹத் பாசில் நடித்த காட்சிகளில் ரீ டேக் எடுக்கலாம் என கூறியபோது, எல்லோரும் எப்படி மலையாள வார்த்தைகளை புரிந்துகொண்டு அதில் தவறு கண்டுபிடித்தீர்கள் என்று ஆச்சர்யமாக கேட்டனர்.. ஆனால் நான் கவனித்தது மொழியை அல்ல, நடிகர்களின் நடிப்பையும், அவர்களது முகபாவத்தையும் வசன உச்சரிப்பையும் மட்டும் தான்.. இந்தப்படத்தில் பஹத் பாசிலும் அபர்ணா பாலமுரளியும் தங்களது முதல் படத்தில் நடிப்பது போன்று மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!