
மலைக்கோட்டை வாலிபன் ஆனார் மோகன்லால்
லிஜோ ஜோஸ் - மோகன்லால் இணையும் படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் மலையாளம், தமிழில் தயாராகிறது. படத்தின் தலைப்பும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்று பக்காவான தமிழில் வைக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!