
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் மீண்டும் மோகன்லால்
இந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கன்னட படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்வு வரும் அக்-20ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு மாலில் நடைபெற உள்ளது.
ஆனால் மோகன்லால் இதில் நடிக்கிறாரா என்பது பற்றி நேரடியாக கூறாமல், அவருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இயக்குனர் பிரேம். "என்ன விதமான உணர்வுகளில் இருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சாரின் ஆதரவு எங்களைப் போன்றவர்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் மோகன்லால் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. இந்தப்படத்தின் டைட்டிலை மட்டுமே அவர் அறிமுகப்படுத்துகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!