
இனி நல்ல படங்களில் நடிப்பேன்: விஜய் தேவரகொண்டா
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற "சைமா -2022" விருது வழங்கும் விழாவில் விஜய் தேவரகொண்டாவிற்கு ‛யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா" என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, ‛நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. நான் இங்கு விருது வாங்குவதற்காக வரவில்லை. உங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன். இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!