
37 வருடத்திற்கு முந்தைய மம்மூட்டி பாடலை ரீ கிரியேட் செய்த குஞ்சாக்கோ
39 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான காதோடு காதோரம் என்கிற படத்தில் இடம்பெற்ற தேவதூதர் பாடி என்கிற பாடலை இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் பாடுவது போல ரீ கிரியேட் செய்து உள்ளார் இயக்குனர் ரதிஷ் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த பாடல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த பாடலை வெளியிட்ட நடிகர் மம்முட்டி, “37 வருடங்களுக்கு முன் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட இந்த பாடலை தற்போது நின்னதான் கேஸ் கொடு என்கிற படத்திற்காக ரீ கிரியேட் செய்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அன்பான குஞ்சாக்கோ போபன் மற்றும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதன் ஒரிஜினல் பாடலை கே.ஜே ஜேசுதாஸ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!