
சிறுவயது கனவு நிறைவேறியது : சம்யுக்தா மேனன் மகிழ்ச்சி
இந்தநிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து கிடைத்த இடைவெளியில் ஓய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா பறந்துவிட்டார் சம்யுக்தா மேனன். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்வது, கங்கை நதியில் நீராடுவது என்பது இவரது கனவாகவே இருந்து உள்ளது. தற்போது உத்தரகாண்ட் பகுதியில் விடுமுறையை கொண்டாடிவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா மேனன் கூடவே தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடும் கங்கை நதியின் சலசலப்பை கேட்க முடிகிறது. இமயமலையில் இருந்து வீசும் தென்றல் என்னை வருடுகிறது. இதற்கு முன் நான் இங்கே இருந்து இருக்கிறேன்.. இங்கேயே வாழ்ந்து இருக்கிறேன் என்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. என் சிறுவயது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார் சம்யுக்தா மேனன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!