
திருமண வரவேற்பில் ஒன்றாக கலந்து கொண்ட மோகன்லால் - மம்முட்டி
இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதும் மிகப்பெரிய அளவில் வைரலாகின. கடந்த மாதம் வரை தாடியுடன் காணப்பட்ட மம்முட்டி, தற்போது நடித்துவரும் சிபிஐ-5 படத்திற்காக கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் காட்சி அளித்தார். அதேசமயம் சமீபத்தில் தான் இயக்கிவரும் பாரோஸ் என்கிற படத்திற்காக புதிதாக வளர்த்திருக்கும் தாடியுடன் புதிய கெட்டப்பில் மோகன்லாலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக காட்சியளித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!