3000 துணை நடிகர்களுடன் மோகன்லாலின் சண்டைக்காட்சியை படமாக்கிய பீட்டர் ஹெய்ன்
ஆக 14, 2023
Advertisement
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‛ஜெயிலர்" படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக சில நிமிடங்கள் வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் மோகன்லால். அவர் மலையாளத்தில் ஏற்கனவே நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் என்கிற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்கா கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.
அங்கே மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 3000 துணை நடிகர்கள் பங்கேற்கும் ஒரு சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளார் பீட்டர் ஹெய்ன். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் இந்த சண்டைக்காட்சி மிகவும் ஹைலைட்டான ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக புலி முருகன் மற்றும் ஒடியன் ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!