விரைவில் முழு இந்தியன் ஆவேன் : அமெரிக்க குடியுரிமையைத் துறக்கிறார் அகில்
ஜூலை 25, 2026
தெலுங்கு திரை உலகில் நடிகர் நாகார்ஜுனா - அமலா நட்சத்திர தம்பதியரின் மகனான அகில், பெற்றோரின் பாணியில் நடிகராக மாறி படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமீபத்தில் வெளியான "லெனின்" திரைப்படம் மூலம் பல வருடங்களுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்துள்ளார் அகில். அவர் இத்தனை வருடங்களாக ஆந்திராவிலேயே வளர்ந்து தனது பணியை செய்து வந்தாலும், அவர் பிறந்தது என்னவோ அமெரிக்காவில்தான். அதனால் அவருக்கு ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையும் உண்டு.
இந்த நிலையில்தான் முக்கியமான முடிவை எடுத்துள்ள அகில், "நான் ஒரு அமெரிக்க குடிமகன் மற்றும் என்னிடம் அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் நான் அதைத் துறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் சில மாதங்களில் நான் முழுமையான இந்தியனாக மாறிவிடுவேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!