பேட்ரியாட் சென்சார் சான்றிதழ், ரன்னிங் டைம் வெளியானது
ஏப் 29, 2026
Advertisement
மலையாளத்தில் கடந்த சில வாரங்களாகவே சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக பேட்ரியாட் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்த இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்வைக்கு இந்த படம் அனுப்பி வைக்கப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ (16 +) சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படம் 3 மணி நேரம் 25 நொடிகள் (3.00.25) ஓடும் விதமாக உருவாகி உள்ளது. பிரபலமான நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளதாலும் ராணுவ மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள கதை என்பதாலும் இந்த அளவிற்கு ரன்னிங் டைம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!