
சமந்தா - நாகசைதன்யா பிரிவு துரதிர்ஷ்டவசமானது : நாகார்ஜுனா
அக் 02, 2021
Advertisement
காதலித்து திருமணம் செய்து, நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளனர். இதுப்பற்றி நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா டுவிட்டரில், ‛‛கனத்த இதயத்துடன் இதை பகிர்கிறேன். சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிரிவு துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடக்கும் விஷயங்கள் அவர்களின் தனிப்பட்டவை. அதில் தலையிட முடியாது. ஆனாலும் இருவரும் என்னுடைய பிரியத்திற்குரியவர்கள். சமந்தாவை எப்போதும் எங்கள் குடும்பம் ஆதரிக்கும். அவர் எங்கள் குடும்பத்தில் இருந்த ஒவ்வொரு தருணங்களும் மறக்க முடியாதது. இந்த நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க கடவுளை வேண்டுகிறேன்"" என தெரிவித்துள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!