
ஜன.,7ல் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ்
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் "ஆர்ஆர்ஆர்". சுதந்திர போராட்ட பின்னணியில் வரலாற்று படமாக இந்த படம் உருவாகி உள்ளது. அக்டோபர் மாதம் 13ம் தேதி இப்படம் வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி வேலைகள் நடக்காத காரணத்தால் பட வெளியீடு தள்ளிப் போனது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் இப்போது பொங்கலுக்கு ஒருவாரத்திற்கு முன்னதாக ஜன.,7ம் தேதி இந்த படத்தை வெளியிடுவதாக அறிவித்து, புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!