
ரஜினியின் 170வது படத்தை இயக்குவது யார்? புதிய தகவல் வெளியானது!
இந்த நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியாக உள்ள நிலையில், அதையடுத்து ரஜினி நடிக்கும் 170வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்விகள எழுந்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கப்போவதாக இன்னொரு தகவல் போயஸ் கார்டன் வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த காலா படத்தை தயாரித்த தனுஷ், இந்த படத்தை இயக்கப்போகிறாராம். ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் இப்படத்தை தயாரிக்கிறார்களாம்.
ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி என்ற படத்தை ஹிட் படமாக கொடுத்து டைரக்டராகவும் தன்னை தனுஷ் நிரூபித்திரு ப்பதால் இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்குகிறாராம் ரஜினி. இப்படம் குறித்த தகவல்கள் அண்ணாத்த ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!