
சைக்கிளுக்கு மாறிய திரிஷா
இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வும் ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. அதன் காரணமாக பழையபடி மக்களும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். சைக்கிளிங் செல்வதற்காக தனியாக நேரத்தை ஒதுக்காமல் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு பதிலாக சைக்கிளில் சென்று வந்தால் அது உடற்பயிற்சியாகவும் மாறிவிடும்.
கடந்த வாரம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சைக்கிளிங் பற்றி பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் சினிமாவின் சீனியர் நாயகிகளில் ஒருவரான திரிஷாவும் தன்னுடைய சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்.
"இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவை பார்த்து இனி பலரும் சைக்கிளிங் செல்ல ஆரம்பிப்பார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!