
நாரப்பா ஓடிடி ரிலீஸ் உறுதி
இதையடுத்து படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை அடுத்து படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக கடந்த வாரங்களில் தகவல் வந்தது. இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விளம்பர வேலைகளை அமேசான் ஓடிடி தளம் ஆரம்பித்துவிட்டது. இதன்மூலம் படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை ஓடிடி தளத்தில் தான் வெளியாகிறது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் படத்தின் வெளியீட்டு நாள் எது என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
அதேசமயம் வெங்கடேஷ் நடித்துள்ள மற்றொரு படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் ஒடிடி தளத்தில் தான் வெளியாகும் என தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!