
இந்தியன் 2 பிரச்னையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
இதனால் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடிக்க தொடங்க, ஷங்கரோ தெலுங்கு, ஹிந்தியில் புதிய படங்களை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினார். இதனால் இந்தியன்-2வை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடி தடை போட்டது லைகா நிறுவனம்.
அதையடுத்து, லைகா நிறுவனமும், டைரக்டர் ஷங்கரும் இந்த பிரச்சினை பேசி சுமூக முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்காரணமாக, இன்று இந்தியன்-2 வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இருதரப்பினருக்குமிடையே பேசி தீர்த்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிபதி சதீஷ்குமார் நியமித்துள்ளார். இவர் லைகா நிறுவனம்-டைரக்டர் ஷங்கருக்கிடையே மத்தியஸ்தம் பேசி அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், இந்தியன்-2 விவகாரம் குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!