
ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல்
2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி ஐதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் இரண்டாம் பாடலை படக்குழு விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தை முடிப்பதற்கு இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை விடுமுறையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டு படத்தின் பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!