
தமிழ் இயக்குனர் மீது புகார் சொல்லும் சுர்வீன் சாவ்லா
“நடிப்புக்காகப் படுக்கை என்பதை நான் மூன்று முறை அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை ஒரு இயக்குனரை சந்திக்கச் சொன்னார்கள். அவர் எனது உடலின் ஒவ்வொரு இன்ச்சையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதன்பின் அவர்கள் தொலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை.
அடுத்து தென்னிந்தியாவில் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் அழைத்தார். அங்கு நீண்ட நேரம் ஆடிஷன் செய்தார்கள். எனக்கு அன்று உடல்நிலை சரியில்லை, எனவே, திரும்பிவிட்டேன். அந்த இயக்குனருக்கு தமிழைத் தவிர ஆங்கிலமோ, ஹிந்தியோ தெரியாது. அதன்பின் அந்த இயக்குனரின் உதவியாளர் என்னை மும்பைக்கு வரச் சொன்னார், ஆனால் நான் போகவேயில்லை. அந்தப் படம் இதுவரை நடக்கவேயில்லை.
ஹிந்தித் திரையுலகிலும் அப்படியான அனுபவம் உள்ளது. சமீபத்தில்தான் அது நடந்தது. ஒரு இயக்குனர், எனது க்ளீவேஜ் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்றார், மற்றொருவரோ எனது தொடையைப் பார்க்க வேண்டும் என்றார்,” எனக் கூறியிருக்கிறார்.
சுர்வீன் சாவ்லாவின் இந்த பேட்டிதான் தற்போது பாலிவுட் வட்டாரங்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!