
ராம் சரண் படம் தான் அடுத்து... : ஷங்கர் முடிவு ?
"இந்தியன் 2" படத்தின் எஞ்சிய பகுதிகளை எடுத்து முடிப்பதற்குள் லைகாவுக்கும், ஷங்கருக்கும் தகராறு வந்துவிட்டது. அதனால், அடுத்து தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர். அதனால், நீதிமன்றத்தில் லைகா வழக்கு தொடர்ந்தது.
அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, லைகா நிறுவனம், தெலுங்கு மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் மீது புகார் கடிதத்தை அளித்தது. அது பற்றி இன்னும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.
இதனிடையே, "இந்தியன் 2" படத்தை முடித்துக் கொடுப்பது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கட்டும். அதேசமயம் ராம் சரண் படத்தை இயக்குவதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என ஷங்கர் முடிவெடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கும், ஐதராபாத்திலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்பு தான் எந்தப் படம் நடக்கும் என்பது தெரியும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!