
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனைத் தொட்ட சிம்பு
மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் தளத்தில் இணைந்தார். அதில் அவரை 2 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாலோ செய்து வருகிறார்கள். அதே காலகட்டத்தில் தான் இன்ஸ்டாகிராம் தளத்திலும் புதிய கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அங்கு அவரைத் தொடர்பவர்கள் டுவிட்டரை விட அதிகமாக இருக்கின்றனர். தற்போது இன்ஸ்டாவில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டிவிட்டது.
“முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு. சமீபத்தில் தான் சிம்பு நடித்த "ஈஸ்வரன்" படப் பாடலான "மாங்கல்யம்" பாடல் அவருக்கு முதலாவது 100 மில்லியன் என்ற சாதனையைக் கொடுத்துள்ளது.
யு டியூபில் 100 மில்லியனையும், இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனையும் அடுத்தடுத்து பிடித்துள்ளார் சிம்பு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!