
மீண்டும் தமிழுக்கு வருகிறார் லாவண்யா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. ஆனால் அவரை ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக இருக்கும் அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், லாவண்யா யார், அவரை கடத்தியவர்கள் யார் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி. விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!