
ஓடிடியில் நேரடியாக வெளிவரும் ஜெய் படங்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது. என்றாலும் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு இதனை தியேட்டரில் வெளியிடலாம் என்று கருதி இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதே போல சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இன்னொரு படமான ஷிவா ஷிவா என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!