
தியேட்டர்களைத் தவிர்க்கும் மக்கள், தவிப்பில் தியேட்டர்கள்
இந்நிலையில் தியேட்டர்களுக்கு வருவதை மக்கள் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்களில் இன்றைய காட்சிகள் எதற்கும் முன்பதிவு செய்யப்படவேயில்லை. ஒரு ஊரில் மட்டுமல்ல பல ஊர்களிலும் இதே நிலைதான்.
ஏற்கெனவே, பெரிய படங்களுக்கு மட்டுமே மக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான "கர்ணன்", அதற்கு முன்பு வெளியான "சுல்தான்" ஆகிய படங்களின் வசூல் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படியும் அந்தப் படங்கள் 30 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வந்துவிடும் என்பதால் மக்கள் தியேட்டர்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
தற்போது பரவி வரும் கொரானோ அலை எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் மக்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போது வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!