
கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு
கடைசியாக நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனிக்கும் மற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் சிம்பு. தன்னுடைய "காரக்குழம்பு" ரெசிபி மூலம் நிகழ்ச்சியில் பேசப்பட்டவர் கனி. போட்டியில் வென்ற கனியை மீண்டும் அவருடைய வீட்டுக்குச் சென்று பாராட்டினார் சிம்பு.
"காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகள் தான் கனி. "தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி" ஆகிய படங்களை இயக்கிய திருவைக் காதலித்து திருமணம் புரிந்தவர்.
சிம்பு அவருடைய நண்பர் நடிகர் மகத், தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோருடன் கனி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிம்பு வந்ததைப் பற்றி, “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை, நிரம்ப நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குனர் திரு டுவிட்டரில், ‛‛இன்ப அதிர்ச்சியாக எங்கள் வீட்டிற்கு வந்த சகோதரர் சிம்பு, மகத், ரக்ஷன், சயத்திற்கு நன்றி. கனி வைத்த காரக்குழம்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்"" என பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!