
மிஸ்டர் காப்ளர் - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம்
மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்ட இந்த குறும்படத்திற்கு அதிக பார்வைகள் கிடைத்தது. 1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2021, மார்ச் 17 வரை இந்த குறும்படத்தை 175 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்து இருப்பதுடன் 5.7 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதை முன்னிட்டு இதன் இயக்குனர் சதீஷ் குருவப்பனுக்கு சென்னையில், ‛‛சாம்பியன்ஸ் ஆப் தி யுனிவர்ஸ் 2021, யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. வசனங்கள் இன்றி அதிக பார்வைகளை பெற்ற குறும்படம் என்ற சாதனை படைத்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!