
த்ரிஷ்யம் 2 தெலுங்கு படப்பிடிப்பை முடிக்கும் வெங்கடேஷ்
கொரோனா பரவல் சூழ்நிலையிலும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி தற்போது இறுதிக்கட்டத்தில் வந்துவிட்டார்கள். இன்றுடன் இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை வெங்கடேஷ் முடிக்கிறாராம். 45 நாட்களுக்குள்ளாக அவரது படப்பிடிப்பு முடிவடைவது ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு படக்குழு தங்களது பணியை வேகமாகச் செய்துள்ளதாக டோலிவுட்டில் பாராட்டுகிறார்கள்.
மலையாளத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இரண்டாம் பாகம் தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கடேஷின் அடுத்த வெளியீடாக "அசுரன்" தெலுங்கு ரீமேக்கான "நரப்பா" வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!