
போன் நம்பர் கேட்ட ரசிகர் : போலீஸ் நம்பரைக் கொடுத்த ஸ்ருதிஹாசன்
சமூக வலைத்தளங்களில் அடிக்க நடிகைகள், நடிகர்கள் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கம். தங்களை ரசிகர்களுடன் இன்னும் அதிகமாக "கனெக்ட்" செய்து கொள்ள இப்படி சாட்களை நடத்துகிறார்கள்.
நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது ரசிகர்களுடன் சாட் ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர் ஒருவர் மிகவும் மரியாதையுடன் "மேடம், ப்ளீஸ் உங்களது வாட்சப் நம்பரைக் கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறார். அவ்வளவு மரியாதையாகக் கேட்ட ரசிகருக்கு போலீஸ் அவசர உதவி போன் நம்பரான 100 என்ற நம்பரைக் கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதை நகைச்சுவையாகச் சொல்வதென்றால் ஒரு ஸ்மைலியாவது போட்டிருப்பார். ஆனால், அப்படியும் போடவில்லை.
மரியாதையாகக் கேட்ட ஒரு ரசிகரிடத்தில் இப்படியா அவர் நடந்து கொள்வது என ஸ்ருதியைக் கண்டிக்கும் வகையில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!