
சிரஞ்சீவியுடன் நடனமாடிய சங்கீதா : கணவர் கிரிஷ் மகிழ்ச்சி
தமிழ்த் திரையுலகில் அதிகம் கவனிக்கப்படாத திறமையான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. அவருடைய நடிப்புத் திறமைக்கு "பிதாமகன்" படம் ஒன்றே போதும். அவரை தமிழ் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சங்கீதா தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் "ஆச்சார்யா" படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடலை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து சங்கீதாவின் கணவர் பின்னணிப் பாடகர் கிரிஷ் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் , “24 வருட கடின உழைப்பு, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் சங்கீதா, கடைசியாக தலைவர் சிரஞ்சீவி சாருடன் திரையைப் பகிர்ந்து கொண்டதற்கு, மணிசர்மா சாரின் அற்புதமான இசை, இயக்குனர் சிவா கொரட்டலாவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!