அசுரன் படத்திற்கு பின் காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். பெயரிடப்படாமல் இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‛விடுதலை" என பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். இதே பெயரில் 1986ல் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் நடிப்பில் ஒரு படம் வெளியானது. இதனால் அப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி இந்த தலைப்பை பயன்படுத்த எண்ணி உள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!