
அவதூறு பேச்சு : விஜய், சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட மீரா மிதுன்
இப்படி தொடர்ந்து சோசியல் மீடியாவில் பிரபலங்கள் பற்றி அவதூறு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வந்த மீரா மிதுன், சில வாரங்களுக்கு முன் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தற்கொலை செய்ய போகிறேன் என கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னை கொலை செய்வதற்கு 8 பேர் கொண்ட ஒரு கும்பல் துரத்துவதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.
தற்போது சோசியல் மீடியாவில் மற்றுமொரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீராமிதுன். அதில், ""விஜய், சூர்யாவைப் பற்றி தான் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதோடு தான் அப்படி பேசியதற்கு அப்சரா ரெட்டி என்ற ஒரு திருநங்கைதான் காரணம். அவர் அதிமுக பிரமுகர் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார் மீரா மிதுன்.
மேலும், இப்படி தன்னை குழப்பி விட்டு விஜய், சூர்யாவை அவதூறாக பேச வைத்த அப்சரா ரெட்டியை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியை கேட்டுக் கொண்டுள்ள மீரா மிதுன், தனக்கு திரையுலகினர் சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் தர வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!