
இசை ரியாலிட்டி ஷோவில் இது புதுசு : இசை நட்சத்திரங்கள் போட்டிபோடும் ஜீ தமிழின் ராக்ஸ்டார்
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் "ராக்ஸ்டார்" தேவி ஸ்ரீ பிரசாத் (டி.எஸ்.பி) தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக நடுவர் குழுவில் பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெறுவார்.
"ராக்ஸ்டார்" நிகழ்ச்சியிலுள்ள புதுமை என்னவெனில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஏற்கனவே பிரபலமான மற்றும் நன்கு அறிமுகமான இசை நட்சத்திரங்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் முதல் "ராக்ஸ்டார்" பட்டத்துக்காக போட்டியிட்டு, வேறெந்த இசை ரியாலிடி நிகழ்ச்சியிலும இல்லாத ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்குவர்
கிகி மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்கியா, சத்தியன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்எஸ்கே ரம்யா, சின்னப் பொண்ணு, வினைதா, ஐஸ்வர்யா சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். பல்வேறு சுற்றுகளுடன் நடைபெறும் கடுமையான போட்டியில் பங்கேற்கும் இசை நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்வதுடன், பிரபல மற்றும் திறமையான கலைஞர்களுள் வெற்றி வாகை சூடப் போகும் மிகச் சிறந்தவர் யார் என்பதையும் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்கள் அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்து போட்டியாளர்கள் மேடையில் தங்களின் இசை மூலம் ரசிகர்களைச் சுண்டியிழுக்கையில், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் (போட்டியின் 2ஆவது வாரம் தொடங்கி) மிஸ்ட் கால் மூலம் வாக்களித்து ஆதரவு தெரிவிப்பார்கள். வாக்களிக்கும் முறை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளருக்கான பிரத்யேக எண்களுக்கு மிஸ்ட் கால் தருவதன் மூலம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறுகையில், ""இசை தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு பல முறை அழைப்பு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒத்துக் கொள்ள முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் உள்ள கான்செப்ட் தான். பல இசைப்பிரபலங்களும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கின்றனர். அதோடு எண்ணற்ற திறமைகளை இருந்தும் அவர்கள் அதை வெளிப்படுத்த சரியான மேடை இல்லாமல் இருக்கும். இந்த மேடை அவர்களுக்கான வாய்ப்பாக நிச்சயம் இருக்கும். இக்கலைஞர்களுக்கு வித்தியாசமான சுற்றுகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்னும் பல புதிய உயரங்களுக்குச் செல்லும் ஒருவரைக் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதனால் தான் இந்த பங்கேற்க சம்மதித்தேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!