
த்ரிஷாவின் முடங்கிய மூன்று படங்களில் ஒன்றிற்கு விடிவுகாலம்
அது போலவே நான்கைந்து படங்களில் முதன்மைக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அவற்றில் "பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2" ஆகிய படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படங்களின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
தற்போது அந்த மூன்று படங்களில் "பரமபத விளையாட்டு" படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேசி முடித்துவிட்டார்களாம். அடுத்த மாதம் வெளியாகும் எனச் சொல்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது படக்குழுவினர் த்ரிஷா இப்படத்தின் பிரமோஷன் எதற்கும் வர மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
மீதி இரண்டு படங்களான "கர்ஜனை, சதுரங்க வேட்டை 2" ஆகிய படங்களின் நிலை என்னவென்பது தெரியவில்லை. த்ரிஷாவின் அடுத்த பெரிய வெளியீடாக "ராங்கி" படம் இருக்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!