
மங்காத்தா தயாரிப்பாளருக்கு வெங்கட் பிரபு வேண்டுகோள்
தற்போது தியேட்டர்களில் வரும் சிறிய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராததால் பழைய திரைப்படங்களைத் தேடிப் பிடித்து திரையிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் கடந்த வாரம் அஜித், நயன்தாரா நடித்த "பில்லா" படத்தைத் தியேட்டர்களில் திரையிட்டார்கள்.
இப்போது "மங்காத்தா" படத்தை தியேட்டர்களில் மீண்டும் திரையிட வேண்டுமென அதன் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் தயாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“வர மே 1ம் தேதி தல 50, அதனால நம்ம தல 50வது படமான "மங்காத்தா"வை உங்க இன்புளூயன்ஸ் யூஸ் பண்ணி ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸ் பண்ணா ரசிகர்கள் நாங்க, உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம், பாத்து செய்யுங்க,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு அஜித் ரசிகர்கள், வெங்கட் பிரபுவின் குழுவைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!