
அடிக்கடி காணாமல் போகும் விஷால்
மூன்று நாட்கள் கழித்து வந்தவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போதும் இதே போல்தான் சொல்லாமல் கொள்ளாமல் சில நாட்கள் எங்கோ காணாமல் போய்விட்டார். விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்தான். அவரே இப்படி நடந்து கொள்வது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஷால் நடித்து வெளிவந்த "சக்ரா" படம் இன்று 25 நாளைத் தொட்டாலும் இந்தப் படத்தால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நம்பியிருக்கும் ஒரே படமான "எனிமி" படத்திற்கும் அவரே எனிமி ஆகாமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!