
புனே சர்வதேச திரைப்பட விழாவில் கட்டில்
இதுகுறித்து இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது: இந்த படம் வணிக நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு சொல்வதற்காகவும் உருவாகி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலம் படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதற்காக படத்தை ஆங்கிலத்திலும் உருவாக்கி உள்ளோம். முதல் அங்கீகாரமாக புனே திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
வருகிற 12ந் தேதி புனேயிலும், 16ந் தேதி மும்பையிலும், அதன்பிறகு நாக்பூர், படவிழாக்களிலும் திரையிடப்படுகிறது. தியேட்டர் பிரச்சினைகள் முடிந்ததும் திரையரங்குகளிலும் வெளியிட இருக்கிறோம். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!