
ஸ்ரீரெட்டி பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்
இந்த நிலையில் அவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. படத்துக்கு ரெட்டி டயரி என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜாங்கம் என்பவர் இயக்குகிறார். ரவிதேவன் என்பவர் தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை தயாரிக்க கூடாது, வெளியிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல் வருவதாக தயாரிப்பாளர் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே இடம் பெறுவதே இதற்கு காணரம். சினிமா வாய்ப்பு தேடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வழியாக படம் சொல்வதே இந்த மிரட்டலுக்கு காரணம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!